தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என்றும் கூட்டணி தொடர்வதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இபிஎஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை. பாஜக உடனான அதிமுக கூட்டணி தொடர்கிறது. அமைச்சர் பி டி ஆர் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்..ஆடியோ விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.