பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக உள்ள 10 நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த வரி மிரட்டலுக்கு பதிலளித்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை, ‘‘நாங்கள் மோதலை விரும்பவில்லை. ஆனால், வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகள் எந்தவிதமான ஆக்கபூர்வமான முடிவுகளையும் வழங்காது. உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்காக பிரிக்ஸ் நாடுகள் பணியாற்றுகின்றன. அரசியல் வற்புறுத்தலுக்கான கருவியாக வரியை பயன்படுத்துவதை எங்களது நாடு எதிர்க்கிறது’’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், சீன அரசு, “மோதல் மற்றும் புவிசார் அரசியலை நிராகரிக்கின்றோம். வரிவிதிப்பு மூலம் அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. இது பயனற்றது, பொருளாதார ஒத்துழைப்பை பாதிக்கும்” என உறுதிபடவும் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில், வர்த்தக ஒப்பந்தங்களில் வரி முறை தலையீடு செய்யாமல், சர்வதேச நலனுக்காக பணியாற்ற வேண்டும் எனும் கோரிக்கையும் சீனாவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.