உத்திரபிரதேசத்தின் நொய்டாவில் ஹரிஷ் ராணா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். தான் தங்கி இருந்த விடுதியில் நான்காவது மாடியில் இருந்து ஹரிஷ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் வெஜிடேட்டிவ் ஸ்டேட் எனப்படும் அசைவற்ற நிலைக்கு சென்று விட்டார். அதன்படி கண்கள் ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். கை, கால்கள் அசைவற்றக் கடந்த 11 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறார். வயதான பெற்றோர் அவரை கவனித்து வருகின்றனர். சொந்த வீட்டை விட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆனால் மகனின் உடல்நலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வயதான தம்பதியினர் சிரமப்பட்டனர். இதனால் தங்களது காலத்திற்குப் பிறகு மகனை பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் மகனை கருணை கொலை செய்ய அனுமதி அளிக்கும்படி உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹரிஷ் செயற்கை சுவாச கருவி உதவியோ குழாய் வழியே உணவு அளிக்கும் நிலைக்கோ செல்லவில்லை. மருத்துவ கருவிகள் இல்லாமல் அவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.

அவரை கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்காது என உத்தரவிட்டது. இதனால் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய சுகாதாரத் துறைக்கு ஹரிஷின் பராமரிப்புக்கான மாற்றுத் தீர்வுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது. கடந்த எட்டாம் தேதி இதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் உத்தரப்பிரதேச அரசின் உதவியுடன் ஹரிசை அவரது வீட்டில் வைத்து பராமரிக்க தயாராக இருக்கிறோம்.

அவருக்கு தேவையான அனைத்து மருத்துவம் மற்றும் செவிலியர் வசதிகள் செய்து கொடுக்கப்படும். இலவசமாக மருந்துகளும் அளிக்கப்படும். நொய்டா மாவட்ட மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதனை ஹரிஷின் பெற்றோர் ஏற்றுக் கொண்டதால் உச்ச நீதிமன்றம் அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தனர். மேலும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.