
பொதுவாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும். ஆனால் வனவிலங்கான காண்டாமிருகம் அவ்வளவு எளிதில் ஊருக்குள் வராது. ஆனால் அப்படி காண்டாமிருகம் ஒருவேளை ஊருக்குள் வந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது ஒரு வீடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் என்ற மாவட்டத்தில் நடந்துள்ளது.
இங்குள்ள ஒரு கிராமத்தில் தோட்டத்திலிருந்து திடீரென சாலைக்கு காண்டாமிருகம் வெளியே வருகிறது. அப்போது அங்கு ஒருவர் வந்த நிலையில் திடீரென கோபத்தில் அவரை காண்டாமிருகம் தாக்க முயன்றது. இதனால் அவர் தான் ஓட்டி வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். ஆனால் அவரை காண்டாமிருகம் விடாது துரத்திய நிலையில் கண்ணில் பட்ட மனிதர்களை எல்லாம் துரத்தியது. மேலும் இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram