உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கான்வாய் போலீஸ் ஜீப் நேற்று விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீசார் உட்பட 15 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதாவது முதல்வரின் கான்வாய் போலீஸ் வாகனம் சென்று கொண்டிருந்தபோது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த மாடு ஒன்று குறுக்கே ஓடியுள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப் , சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியுள்ளது. உத்திரபிரதேசத்தில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளால் அதிக விபத்து நடப்பதாக பலரும்  குற்றம் சாட்டி வருகின்றனர்.