உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி  மாவட்டத்தில் கடந்த 13 மாதங்களில் அடுத்தடுத்து 9 பெண்கள் ஒரே மாதிரியாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் உள்ளூர் மக்கள் சொன்ன அடையாளங்களின் படி காவல்துறையினர் 3 பேரின் புகைப்படங்களை வரைந்து தீவிரமாக தேடினர். இந்நிலையில் தற்போது சீரியல் கில்லர் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

அந்த கொலையாளியின் பெயர் குல்தீப். இவருக்கு திருமணமான சிறிது நாட்களில் அவருடைய மனைவி விட்டு சென்றுவிட்டார். இதனால் பெண்கள் மீது அதிக அளவில் கோபம் கொண்டார். இந்நிலையில் அவர் தனியாக சிக்கிய பெண்களிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண்கள் மறுப்பு தெரிவித்ததால் கோபத்தில் அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.