பிரிட்டன் நாட்டில் பிரபல ஆணுறை நிறுவனமான Durax செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் நாடும் முழுவதும் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் ஆணுறைகள் ஆர்டர் செய்பவர்களின் விவரங்கள் மட்டும் தற்போது இணையதளத்தில் கசிவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது Durax தளத்தில் ஆணுறைகள் ஆர்டர் செய்பவர்களின் பெயர், முகவரி மற்றும் ஆர்டர் தகவல்கள் போன்றவைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் இணையதளத்தில் கசிந்து வருகிறதாம். மேலும் இந்த பிரச்சனை order confirmation தளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக இதை கண்டுபிடித்த டெக் பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். மேலும் இந்த தகவல் ஆணுறை ஆர்டர் செய்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.