
தங்கக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் முன்பு காவல்துறையிடம் பிடிபட்டால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வழக்கு சுங்கத்துறைக்கு மாற்றப்படும். ஆனால் புதிய BNS சட்டத்தில் அது திட்டமிட்ட குற்றமாக சேர்க்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் செய்யும் நபருக்கு குறைந்தபட்சம் 5 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் அதிகபட்சம் ஆயுள் தண்டனை, குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.