கோவையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களை அதிரவைக்கும் ஒரு திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆட்டோ ஸ்டாண்டுகளில் வரிசையாக ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது, ஒரு கும்பல் தங்களது ஆட்டோவை அங்கே கொண்டு வந்து நிறுத்துகின்றனர். பார்ப்பதற்குச் சாதாரணமாக ஆட்டோவை நிறுத்துவது போலத் தெரிந்தாலும், அவர்கள் நைசாக மற்ற ஆட்டோக்களின் சீட்டுக்கு அடியில் இருக்கும் பேட்டரிகள் மற்றும் விலையுயர்ந்த உதிரி பாகங்களைக் கழற்றித் திருடிச் சென்றுள்ளனர்.

“>

அங்கு நிறுத்துபவர் சக ஓட்டுநர்கள் என்பதால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த கும்பலின் கைவரிசை, அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. “தன்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளியின் வயிற்றிலேயே கை வைக்கலாமா?” என சக ஆட்டோ ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களின் புகாரின் பேரில், கோவை மாநகர போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்தத் திருட்டு ஆட்டோ கும்பலைத் தேடி வருகின்றனர்.