
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ‘epass.tngea.org’ என்ற இணையதள முகவரியில் இ-பாஸ் பெறலாம். மே 20 ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.