பாரதீப் துறைமுக பகுதியில் காலில் கேமரா-சிப் உடன் பிடிபட்ட புறாவை ஜகத்சிங்பூர் காவல்துறையினரிடம் மீனவர்கள் ஒப்படைத்துள்ளனர். அந்த புறாவின் சிறகுகளில் பச்சை நிறத்தில் எழுதப்பட்டிருந்தவை ரகசிய குறியீடாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அதனை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசாவின் ஜகத்சிங்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் பிஆர் கூறியதாவது “எங்களது கால்நடை மருத்துவர்கள் பறவையை பரிசோதிப்பார்கள். அதன் கால்களில் பொருத்தப்பட்ட சாதனங்களை ஆய்வு மேற்கொள்ள நாங்கள் மாநில தடவியல் ஆய்வகத்தின் உதவியை நாடுவோம். அதில் பொருத்தப்பட்டு இருக்கும் சாதனங்கள் ஒரு கேமரா மற்றும் மைக்ரோசிப் போல் தெரிகிறது” என அவர் தெரிவித்தார்.