
நாடாளுமன்றத்தில் அமைச்சர் அம்பேத்கர் பெயரை கூறுவது தற்போது பேஷன் ஆகிவிட்டது எனவும் அவருடைய பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் கூட அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு செல்லலாம் என்றும் கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியை விளாசியுள்ளார். இது பற்றி சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அமித்ஷா அம்பேத்கர் பற்றி பேசியதற்கு நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இது பற்றி அதிமுக விடமிருந்து மூச்சு பேச்சு கூட இல்லை. இது பற்றி எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டபோது ஜெயக்குமார் நிலைப்பாடே தன்னுடைய நிலைப்பாடு என்று கூறுகிறார். இப்படிப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை யாராவது பார்த்துள்ளீர்களா.? இது போன்ற விளக்கத்தை உலக அரசியல் வரலாற்றில் நான் எங்கேயும் கேட்டதில்லை. சரி அது போகட்டும் என்று ஜெயக்குமார் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்த்தால் அம்பேத்கர் பற்றி பேசியதற்கு பாஜக அனுபவிக்கும் என்று மட்டும் தான் கூறியுள்ளார். பாஜகவுக்கு பின்விளைவுகள் ஏற்படும் என்பது தமிழக மக்களுக்கு எப்போதோ தெரியும். அவர் சொல்லி தான் இதை தெரியவேண்டும் என்று இல்லை. மேலும் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பாஜகவுக்கு கட்டணம் தெரிவித்து ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை என்று கூறினார்.