உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஊழியர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவாகத்தான் சம்பளம் வழங்கப்படுவதாக உலக புள்ளியியல் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலக புள்ளியியல் அமைப்பு ஒரு புள்ளி விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளது. அதனைப் பார்த்த பலருக்கும் அவர்களின் நாடு குறித்த பல சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. அதாவது உலகம் முழுவதும் 23 நாடுகளில் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக அந்த புள்ளியியல் விவரங்கள் கூறுகிறது. இதனை தொடர்ந்து அந்த வரிசைப்படி சுமார் பத்து நாடுகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடுகள் – மாத சம்பளம்

  1. சுவிட்சர்லாந்து – 6,096 டாலர் – ரூ. 4,098,567
  2. லக்ஸம்பர்க்- ரூ.4,10,156
  3. சிங்கப்பூர் – ரூ.4,08,030
  4. அமெரிக்கா – ரூ.3,47,181
  5. ஐஸ்லாந்த் – ரூ. 3,27,716
  6. இந்தியா – ரூ 46,861
  7. சீனா- ரூ.87,246
  8. பங்களாதேஷ் – ரூ.20,584
  9. பாகிஸ்தான் – ரூ.11,858

இந்த புள்ளிவிவர பட்டியலில் இந்தியா 65 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதிலும் இந்தியாவை விட மிக குறைவாக சம்பளம் வழங்கும் நாடுகளும் உள்ளன.