பதான்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஷாகித் லத்தீப் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஷாஹித் சுட்டுக் கொல்லப்பட்டார். 41 வயதான ஷாகித் லத்தீப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JEM) அமைப்பைச் சேர்ந்தவர். ஜனவரி 2, 2016 அன்று நடந்த பதான்கோட் தாக்குதலில் முக்கிய குற்றவாளி. அவர் நான்கு பயங்கரவாதிகளை பதன்கோட்டிற்கு அனுப்பி, சியால்கோட்டில் இருந்து இந்தத் தாக்குதலை நடத்தினார்.