பிரெஞ்சு பேஷன் பிராண்டான கோபர்னி, கிரேக்க ஆராய்ச்சியாளர் ஐயோனீஸ்  மைக்கேலோடிஸுடன் இணைந்து உலகின் மிக இலகுவான கைப்பையை உருவாக்கியுள்ளது. இதன் மொத்த எடை 37 கிராம் மட்டுமே. ஏரோஜெல் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பொருள் 99 சதவீதம் காற்று மற்றும் ஒரு சதவீதம் கண்ணாடி கொண்டுள்ளது. இந்த கைப்பையில் மிக இலகுவான பொருட்களை மட்டுமே கையாள முடியும். 1200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கும்.