உலகளவில் youtube சேனல்களை பலர் பயன்படுத்துகிறார்கள். தற்போது பொழுதுபோக்கு அம்சமாக யூடியூப் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்நிலையில் youtube-ல் பலர் சேனல்களை தொடங்கி வீடியோக்கள் போன்றவற்றை பதிவு செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் youtube-பராக ‌ ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் இருக்கிறார்.

இவர் மிஸ்டர் பீஸ்ட் என்ற சேனலை நடத்திவரும் நிலையில் 34 கோடி சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜிம்மி தன்னுடைய காதலிக்கு ப்ரபோஸ் செய்த நிச்சயதார்த்தத்தை எளிமையாக வீட்டில் முடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தற்போது தான் அவர் பகிர்ந்துள்ளார். இவர் தியா பூய்சென் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மேலும் தற்போது ஜிம்மிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.