
பிரபல சூஃபி கவிஞரும் அறிஞருமான அமீர் குஸ்ராவை நினைவு கூறும் ஜகான் இ குஷ்ராவின் 25வது எடிசன் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சூஃபி பாரம்பரியம் இந்தியாவில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் பிறந்த குஸ்ரா இந்தியா மற்ற நாடுகளை விட உயர்ந்தது என்றார்.
அதன் பிறகு அதன் அறிஞர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்று கூறினார். அதோடு உலகின் தலைசிறந்த மொழி சமஸ்கிருதம் என்று குஸ்ரா பாராட்டியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் தத்துவம் மற்றும் கணித கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது என்றார். மேலும் வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களையும் கூறினார்.