
அயல்நாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டுக்கு பயணம் செய்துள்ளார். அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடம் மிகுந்த உற்சாக வரவேற்பு கிடைத்ததோடு, மோடியின் வருகை இந்தியர்களுக்கு பெருமித தரும் தருணமாக அமைந்தது.
கவாய் நகரில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முன்னாள் பிரதமர் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் கலந்து கொண்டு, மோடி எழுதிய குஜராத்தி கவிதையிலிருந்து மேற்கோள் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
🔴 At Port of Spain, Trinidad & Tobago’s PM Kamla Persad-Bissessar quoted PM Modi’s Gujarati poem ” #AankhAaDhanyaChhe” — “Blessed Are These Eyes” — a tribute to vision, hope and destiny, ahead of his #BRICS-bound journey 🇮🇳🇹🇹pic.twitter.com/G1H6Dzw6ra
— JahansherFirozeChoudhury (@Jahansher) July 4, 2025
“>
அவர் குறிப்பிட்டதாவது:
“நாம் காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும்போது, கடினமான காலங்களில் நமக்கு துணையாக இருந்தவர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் நமது வாழ்க்கைப் பயணத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும்” என்று, மோடியின் (இந்த கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை) என்ற கவிதையைச் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே தனது உரையில் பிரதமர் மோடி, கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவாரின் சந்ததியர் என வலியுறுத்தினார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, டிரினிடாட் – டொபாகோ நாட்டில் சுமார் 5.56 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர், அதாவது மொத்த மக்கள்தொகையில் 40 சதவீதம். இவர்களில் பெரும்பாலோர், 1845 முதல் 1917 வரை இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களாக குடிபெயர்ந்தவர்களின் சந்ததிகள் ஆவார்கள்.
இந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் பரவியுள்ள இந்தியருக்கிடையே வம்சபாரம்பரியம், மொழி, கலாசாரம் ஆகியவை எப்படி இன்றும் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. மேலும், இந்தியா – டிரினிடாட் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய பயணமாக இது வரலாற்றில் பதிவு செய்யப்படலாம்.