உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மோகன்லால் கஞ்ச் பகுதி அமைந்துள்ளது. இங்கு சஞ்சய் என்பவர் தன்னுடைய மனைவி சவிதாவுடன் வசித்து வந்தார். இதில் சஞ்சய் தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கள்ளக்காதலில் இருந்த நிலையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் சாவித்திரிக்கு தெரிய வரவே அவர் தன் கணவருடன் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த திங்கட்கிழமை சவிதாவை ஒரு மாந்திரீகரிடம் அவரது கணவர் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வரும்போது தன்னுடைய மனைவியின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து பின்னர் சேலையால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் சவிதா உயிரிழந்த நிலையில் பின்னர் உடலை 20 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளார். அங்குள்ள ஒரு பெரிய பள்ளத்தில் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் இந்த விவரங்கள் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சவிதாவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில் சஞ்சையை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.