விக்கிரவாண்டி அருகே சாலை விபத்தில் இறந்த வாலிபர் யார் என்பது உறுதி செய்யப்பட்டது. விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில், நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் புதுச்சேரி நோக்கிச் சென்ற மஹிந்திரா காரின் முன்பக்க டயர் வெடித்து, அவ்வழியாகச் சென்று, எதிரே வந்த மூன்று பைக்குகள் மீது மோதியது.

இந்த விபத்தில் பில்லூரை சேர்ந்த பொறியாளர் கருணாகரன் (41) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கில் வந்த கருணாகரன் மனைவி பாக்கியலட்சுமி(36) படுகாயம் அடைந்தார். மற்றொரு பைக் ஓட்டுநரான ராதாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி(40) அவரது மகன் குரோஷின்( 7), மூன்றாவது பைக்கில் சென்ற வாலிபர் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துரதிர்ஷ்டவசமாக, அடையாளம் தெரியாத இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், அவர் விக்கிரவாண்டி அருகே பொன்னங்குபம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் வல்லரசு(24) என்பது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது தெரியவந்தது.