தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த அனைவரும் மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அவர், தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் அனைவருமே பாஸ் தான் என்றும் கூறினார்.

இதுவரை 1.55 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முகாம் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது பற்றி குடும்ப தலைவிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.