
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவருடைய கட்சியில் ஏராளமானோர் இணைந்து வருகிறார்கள். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை விஜய் தொடங்கியதிலிருந்து அந்த கட்சியினர் பொது மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அவர்கள் களத்தில் இறங்கி செய்தார்கள்.
அதன் பிறகு உதவி என்று கேட்டு வரும் கஷ்டப்படும் மக்களுக்கும் அவர்கள் உதவி செய்வது தொடர்பான வீடியோ, சமீபத்தில் கணவனை இழந்து குழந்தைகளுடன் வேலையில்லாமல் தவித்த ஒரு பெண்ணுக்கு டீக்கடை வைத்து கொடுத்து உதவியது போன்ற வீடியோக்கள் வெளியானது. அந்த வகையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சாலையில் ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இந்த வீடியோவை தமிழக வெற்றி கழகத்தினர் உயிர் முக்கியம் பிகிலு என்ற தளபதி விஜய் படத்தின் வசனத்துடன் இணையதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.
தேனி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் #மகளிர்_அணி சார்பில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது @actorvijay @BussyAnand pic.twitter.com/bTFGZAvq45
— Dr_LEFT_ PANDI_TVK (@leftpandi) January 1, 2025