சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பெரியவர்களுக்கு ஏற்கனவே 115 ரூபாய் வசூலித்த நிலையில் அதே தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஹேண்டி கேம் 350 ரூபாய், கேமரா 750 ரூபாய், சிங்கம் மற்றும் மான் போன்ற விலங்குகளை பார்க்க செல்லும் பேன் கட்டணம் 150 ரூபாய் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு கீழானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.