சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும் சேவ் சக்தி நிறுவனத்தின் நிறுவனர் நடிகை வரலட்சுமி சரத்குமார் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது “நாகரீகம் வளர்ந்த காலத்தில் பெண்கள் குடும்ப தலைவர்களாக இருந்த வரலாறு உள்ளது.

அதனை தொடர்ந்து நாட்டில் பல சமூக கட்டமைப்புகள் மாறி மாறி வந்ததில் பெண்கள் சந்தித்த கொடுமைகள் என்பது உலகத்தில் எப்பகுதியிலும் நடக்காத ஒன்று. ஒட்டு மொத்த இந்தியாவில் 24.1% பெண்கள் தான் உயர்கல்விக்கு செல்கின்றனர். இருப்பினும் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியிலிருந்து உயர்கல்விக்கு போகும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் புதுமைப் பெண் திட்டம் துவங்கிய பின்  72 சதவீதம் பெண்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர்” என்று அவர் கூறினார்.