இலங்கை வீரர் பதினாரா  சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார். இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். இதற்கிடையில் இவருக்கு கடந்த வருடம் காயம் ஏற்பட்டதால் பவுலிங் ஆப்ஷனை சற்று மாற்றினார். மலிங்காவின் கை ஆக்க்ஷனை விட சற்று மேலே இருக்கும் படி மாற்றியுள்ளார். இந்த புது ஆக்சன் ஆனது அவருக்கு செட் ஆகவில்லை. இதனால் அவர் தொடர்ந்து மாற்றி வருகிறார்.

பழைய ஆக்ஷனில் பந்து வீசினால் எப்போது வேண்டுமானாலும் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் தற்போது புது ஆக்ஷனில் பந்து வீசி வருகிறார். இதனால் இவருடைய பந்துவீச்சு தாக்கத்தை ஏற்படுத்த முடியாத அளவிற்கு மாறிவிட்டது. இதனால் ஐபிஎல் 18ஆவது  சீசனில் இவர் எப்படி செயல்பட போகிறார் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் பதினராவை சந்தித்து பேசிய தோனி,  ” கை ஆக்ஷன் மாறினாலும் பரவாயில்ல. உன்னுடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு கொஞ்சம் பயத்தை  ஏற்படுத்துகிறது என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். மேலும் சுதந்திரமாக, மன உறுதியுடன் இருப்பதை உணர்ந்தாலே உன்னால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.