
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மோடி வந்தால் கெட் அவுட் மோடி என்று உதயநிதி சொல்வாராம். நீ சரியான ஆளாக இருந்தால் சொல்லிப் பாருடா. உன் வாயிலிருந்து கெட் அவுட் மோடி என்று சொல்லிப்பாரு. எங்க அப்பா முதலமைச்சர், என் தாத்தா ஐந்து முறை முதலமைச்சர் என்று நீ சொல்லி பாரு. உன் வாயிலிருந்து எங்க உலகத் தலைவர் மோடியை சொல்லிப்பாரு. உன் அப்பா செட்டிங் முதலமைச்சர், நீ துணை முதலமைச்சர் சொல்லிப்பாரு.
இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன சொன்ன? கெட் அவுட் மோடி என்று சொல்வாராம். வெளியே போடா மோடி என்று சொல்வாராம். உனக்கு ஒரு உலகத் தலைவரை மதிக்கவே தெரியவில்லை. நீ ஒரு கத்துக்குட்டி. காலையில 11 மணிக்கு தான் உன் மேல் வெயிலே படும். நீ சூரியனை காலையில் பார்த்ததே கிடையாது. சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் நீ பார்த்திருப்பாய். தினமும் காலை 3:30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோகா செய்துவிட்டு பைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி செய்யும் ஆளிடம் 11.30 மணிக்கு எழுந்திருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா சாதாரண நடுத்தர மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று உதயநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.