சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது வாலிபர் ஒருவர் ஒரு டிராக்டரின் அருகில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அந்த டிராக்டர் தானாக முன் சென்றது. இந்த வாலிபர் அதனை தடுப்பதற்காக முயன்ற நிலையில் திடீரென டிராக்டரின் சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டார்.

அந்த டிராக்டர் மெதுவாக நகர்ந்ததால் சக்கரம் அவரின் மீது ஏறி இறங்கிய போதிலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

https://x.com/TodayiLearrned/status/1933159845793824793