உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று மேக வெடிப்பு காரணமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது அங்குள்ள மந்தாகினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இருப்பினும் கேதர்நாத் கோவிலுக்கு யாத்திரைக்கு சென்ற 150 முதல் 200 பக்தர்கள் அங்கு சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கோவிலுக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதோடு தற்காலிகமாக கேதர்நாத் கோவிலுக்கான புனித பயணமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.