அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாரிசு அரசியலையும் குடும்ப ஆட்சியையும் தலைமையிடமாக கொண்டு திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.ஸ்டாலினும், அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலினும் ஏதேதோ பயத்தில் சமீப காலமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

தனது குடும்ப வளர்ச்சிக்காக சிந்தித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை செயல்படுத்த நிதி இல்லை என்று கூறிவிட்டு, தனது தந்தை கருணாநிதியை தமிழகத்தில் நவீன கால சிற்பி போன்ற உருவகப்படுத்துவதற்காக பன்னாட்டு அரங்கம், கடலில் பேனா சிலை போன்ற மக்களின் வரிப்பணத்தை கொண்டு மக்களுக்கு பயனளிக்காத திட்டங்களை செலவிடப்படுவதை சுட்டிக்காட்டினார்.

42 மாத ஊழல் மாடல் திமுக ஆட்சியில் மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. 52 ஆண்டு திராவிட ஆட்சி கால வரலாற்றில் தமிழக மக்கள் நலனுக்குரிய திட்டங்களை அதிக அளவில் நிறைவேற்றியது அதிமுக ஆட்சியிலா? அல்லது திமுகவின் ஊழல் ஆட்சியிலா? என்பது குறித்து பொது மேடையில் விவாதிக்க வாரிசு அடிப்படையில் துணை முதல்வராகி இருக்கும் உதயநிதி தயாரா? அவரோடு விவாதிக்க நான் தயார். இடம், நாள், நேரத்தை விஷ கொடுக்கே தீர்மானிக்கட்டும் என கூறியுள்ளார்.