விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது மக்களுடைய விருப்பத்தில் இருக்கிறது. ஆனால் வாக்களித்த மக்களை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு ஆளுநராக இருந்து கொண்டு தமிழிசை சௌந்தரராஜன் இப்படி பேசக்கூடாது என்றார்.

அதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாத மருத்துவமனையில் இருந்து செங்கலை எடுத்து வந்து காட்டினார். ஆனால் அண்ணாமலை விளம்பரத்திற்காக உதயநிதி செய்தது போல் செய்ய வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரியின் செங்கலை கொண்டு வந்து காண்பித்திருக்கிறார். கட்டிடத்திலிருந்து எப்படி செங்கலை  கொண்டு வர முடியும் என்று எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். அதன் பிறகு அண்ணாமலை எந்த மருத்துவக் கல்லூரியில் இருந்து செங்கலை எடுத்து வந்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.