ஈரோடு கிழக்கில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட, அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும் பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக இடையே தான் போட்டி என்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கில் கண்டிப்பாக அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதில் தற்போது அக்கட்சியினர் தீவிரமாக இருக்கிறார்களாம். திமுக அமைச்சர்கள் அனைவரும் களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும் களத்தில் இறங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 50 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மட்டுமே ஆட்சி புரிந்து வரும் நிலையில் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை தான் மக்களுக்கு பரீட்சயமான சின்னம். ஈரோடு கிழக்கில் தற்போது உதய சூரியன் போட்டியிடாத நிலையில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் இருக்கும்.

அதேசமயம் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னம் இருக்கும். இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மக்கள் உதயசூரியனை தேடும் போது அது இருக்காததால் தங்களுக்கு பரீட்சயமாக தெரியும் இரட்டை இலை சின்னத்தின் பட்டனையே அமுக்கி விடுவார்கள் என தற்போது ஒரு புது தகவல் பரவி வருகிறது. ஆனால் இதெல்லாம் குருட்டு நம்பிக்கை என திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தின் மொத்த அரசியல் பார்வையும் தற்போது ஈரோடு கிழக்கு நோக்கி சென்றுள்ள நிலையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு திட்டம் என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.