உதகையில் கோடை காலம் முடிந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உதகை மலை ரயில் தினமும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதவி சென்றடையும். இந்த சிறப்பு மழைறையில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.