நாட்டின் பிரதமர் மக்களின் உணவுத்தட்டில் எட்டிப்பார்ப்பதே அநாகரீகம். அதே தட்டில் இருக்கும் உணவை வைத்து அரசியல் பேசுவது, காட்டுமிராண்டித்தனம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் சாமன் மாதத்தில் இறைச்சி உண்பது முகலாயர்களின் மனநிலையை காட்டுவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளதற்கு, பதில் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் பதிவில், இந்திய அரசியலமைப்பு சட்டம், இந்திய மக்கள் அனைவருக்கும், அவரவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவும், உணவை உண்ணவும், தொழிலை செய்யவும் முழு உரிமையை வழங்கியிருக்கிறது.

ஆனால் பிரதமருக்கு, இந்திய அரசியலமைப்பு சாசனம் என்று சொன்னாலே, பாகிஸ்தான் போன்ற உணர்வு வருகிறது. மோடி தேர்தல் பிரச்சாரத்தில் “புனிதமான சாவன் மாதத்தில், ஆட்டிறைச்சியை சமைத்துச் சாப்பிட்டு, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை எதிர்க்கட்சியினர் புண்படுத்துகின்றனர்” எனப் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.