
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம்பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 5 பெண்கள் வீட்டில் உடை மாற்றும்போது மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்ததை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவர் இளம் பெண்களை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனால் கிரிதரனை போலீசார் கைது செய்து அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.