உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கன்னோஜ் என்ற பகுதியில் காந்தி சிலை இருந்தது. இந்தப் பகுதியில் திடீரென்று வேகமாக வந்த லாரி ஒன்று காந்தி சிலை மீது மோதியது. இதனால் காந்தி சிலை உடைந்து கீழே விழுந்தது.

அப்போது மது போதையில் அந்த சிலை அருகே இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்கள் காந்தி சிலை கீழே உடைந்து விழுந்ததை பார்த்து திடீரென கட்டி அணைத்து கதறி அழுதார்கள். மேலும் அவர்கள் உடைந்து போன சிலை அருகே கட்டிப்பிடித்த படியே அழுது உருண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.