இந்திய சுவிசேஷ திருச்சபை பேராயர் எஸ்.ரா சற்குணம் உடல்நல குறைவினால் கடந்த 22ஆம் தேதி காலமானார். அவருக்கு சென்னை வானகரத்தில் இறுதி அஞ்சலி நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பிறகு சென்னை மேயர் பிரியா, அமைச்சர்கள் பொன்முடி மற்றும் கே.என் நேரு ஆகியோரும் நேரில் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயரான எஸ்.ரா சற்குணம் ஒரு சிறந்த அரசியல் நிபுணராகவும் கருதப்படுகிறார். அவர் பல்வேறு சமயங்களில் பலருக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் சமயங்களில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.