பொதுவாகவே காலநிலை மாற்றத்தின் போது சளி இருமல் பிரச்சனை என்பது அனைவருக்கும் இருக்கும். இஞ்சி வீடுகளில் அதிகமாக பயன்படுத்துகிறோம். இது சளி பிரச்சனைக்கு எதிராகவும் போராடுகின்றது. இஞ்சி பயன்பாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதய ஆரோக்கியத்தில் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

ரத்த நாளங்களை திறக்க இஞ்சி தண்ணீர் உதவியாக இருக்கும். இது ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

இஞ்சி டீ அடிக்கடி குடித்து வந்தால் வாதத்தை தூண்டி தேவையற்ற சில விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இஞ்சியை எடுத்துக் கொள்ளும் போது உலர்ந்த இஞ்சியை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். தேனீர் அல்லது தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்.

செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு உப்புசத்தை போக்கவும் இஞ்சி உதவுகிறது. செரிமான அமைப்பில் கோளாறுகள் ஏற்படும் போது இஞ்சி கலந்த தண்ணீர் குடிக்கலாம்.

சிலர் அடிக்கடி நொறுக்கத்தினி சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இஞ்சி தண்ணீர் கை கொடுக்கும். இது பசியை கட்டுப்படுத்தி வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும் சளி பிரச்சனைக்கும் இது தீர்வாக இருக்கும்.