பணத் தேவை என்பது அனைவருக்குமே இருக்கும்.. வாங்கும் சம்பளத்தை வைத்து மட்டும் நம்முடைய தேவைகளை சமாளித்து விட முடியாது. திடீரென்று பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளில் கடன் வாங்குவோம். குறிப்பாக பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் வங்கிகள் மூலமாக எளிதாக வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை தனிநபர் கடன்களை வழங்கும் முன்னணி வங்கிகளாகும்.

இந்த வங்கிகளில் தனி நபர் கடன் வாங்கினால் 8 முதல் 16 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்ட வேண்டும் . அனைத்து வங்கிகளிலுமே சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் வங்கி கடன் வழங்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால் அந்த வங்கியின் யோனோ செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலமாக கடனுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் இருக்கிறது என்றால் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும் .உடனே வங்கி விண்ணப்பத்தை சரிபார்க்கும். அனைத்தும் சரியாக இருந்தால் கடன் தொகை உடனடியாக வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.