
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 104 விளையாட்டு வீரர்களுக்கு இதுவரை பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. FICCI சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது.
உலகக்கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்க நிதியுதவி கோரிய டாஸ்மாவிற்கு உடனடியாக உதவி செய்யப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி தேவைப்படுவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.