
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியின் பெஹரி பகுதியில் சாஹித் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாஹித் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து சாஹித் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தியுள்ளார். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஷாகித் கத்தியால் தனது மனைவியை தாக்கியுள்ளார்.
மேலும் அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். இதனால் சாஹித்ஹின் மனைவி படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் மீது சாஹித் சிகரட்டால் சூடு வைத்ததாகவும் மின்சாரம் பாய்ச்சி சித்திரவதை செய்ததாகவும் அந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சாஹித்தை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.