பிரபல பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் உங்களது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ.147.50 எடுக்கப்பட்டுள்ளதா? பதற்றப்பட வேண்டாம். இது நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுக்கான ஆண்டுக் கட்டணம்.

சாதாரண டெபிட் கார்டுகளுக்கு எஸ்பிஐ வங்கி ரூ.125 கட்டணம் வசூல் செய்கிறது. இதனுடன் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.147.50 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த தொகையை கணக்கில் வைத்திருப்பது அவசியம்.