மிக நீண்ட தூர பயணத்திற்காக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதிகமான மக்கள் ரயில்களில் தான் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்தவகையில் சில முக்கிய விதிமுறைகளில் மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, IRCTC செயலியில் புதிய அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது பயணி டிக்கெட்டை புக் செய்த பிறகு அதில் ஏதேனும் மாற்றங்களை செய்ய வேண்டும் எனில் செய்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, பயண டிக்கெட் புக் செய்யும் போது உணவிற்கென்று தனி கட்டணம் செலுத்த மறந்து விட்டீர்கள் எனில் டிக்கெட் புக் செய்த பிறகு கூட உணவு வேண்டுமெனில் வாங்கிக் கொள்ளலாம். அதேபோல, டிக்கெட் புக் செய்த பிறகு உங்களுக்கு தேவையான திருத்தங்களை டிக்கெட்டில் செய்து கொள்ளலாம். இதன் மூலமாக ரயில் பயணிகள் விரும்பிய சேவைகளை பெற்று ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம்.