பொதுவாகவே மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் கொசு தொல்லை என்பது அதிகமாக இருக்கும். இதனால் பல நோய்களும் ஏற்படுவதால் வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்.

அதன்படி சமையலறை பொருள்களில் ஒன்றாக இருக்கும் பூண்டு இதற்கு பயன்படுத்தலாம். ஒரு டம்ளர் இதை பாத்திரத்தில் ஊற்றி அதில் பூண்டு மற்றும் கிராம்பு ஆகியவற்றை தட்டி போட்டு நன்றாக கொதிக்க விட்டு ஆரிய பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து அதனை பயன்படுத்தினால் கொசுக்களை விரட்டலாம்.

எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் கிராம்புகளை சொருகி வைத்து கொசு நடமாடும் இடத்தில் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சைட்ர் வினிகர் சிறிதளவு எடுத்து அதில் தண்ணீர் சம அளவு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதனைப் போலவே நீர் கரைசலையும் ஸ்பிரே பாட்டிலில் வைத்து இதற்கு பயன்படுத்தலாம்.

புதினா செடி வாசனையும் கொசுவுக்கு எதிரி என்று கூறலாம். புதினா இலைகளை நசுக்கி கொசு வரும் இடத்தில் போட்டு வைத்தால் கொசு தொந்தரவு சற்று குறையும்.