கோடை காலத்தில் வெயில்வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இந்த மின்சாதன பொருட்களை உபயோகப்படுத்துவதால் மின் கட்டணமும் உயரும். ஆனால் திட்டமிட்டு ஏசியை உபயோகப்படுத்தினால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஒரு மணி நேரம் ஏசி ஓட்டினால் எவ்வளவு மின் கட்டணம் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் ஏசியை பயன்படுத்துகிறார்கள், அந்த ஏசியின் வகை, திறன் மற்றும் வேகத்தை பொறுத்து அமையும். 24 மணி நேரத்தில் ஆயிரம் முதல் 3000 யூனிட் மின்சாரத்தை ஏசி உபயோகப்படுத்தும். அது ஏசியின் டன் பொருத்து வேறுபடும். ஒரு டன் ஏசி ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை செலவழிக்கும். திறன் கொண்டது 1.5 டன் ஏசி 1500 வாட்ஸ் மின்சாரத்தை செலவழிக்கும் திறன் கொண்டது.

உங்களிடம் ஐந்து நட்சத்திரங்கள் கொண்ட ஒரு டன் ஏசி இருந்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தும். ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை கொண்ட 1.5 டன் ஏசியை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதத்திற்கு 360 யூனிட் மின்சாரம் செலவழியும். ஒரு யூனிட் விலை 7 ரூபாய் என்றால் மாதம் 2500 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு நபர் ஏசியை 21-ரிலும் மற்றொரு நபர் 16-ரிலும் இயக்குகிறார் என்றால் இருவருக்கும் வெவ்வேறு மாதிரியான மின் கட்டணம் வரும். ஏசியை குறைவான வெப்ப நிலையில் இயக்குபவருக்கு கட்டணம் அதிகமாக வரும்.