இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்படுகின்றன. தற்போது 300 ரூபாய் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் சிலிண்டர்கள் காலாவதியாகி விட்டதா என்று கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டரின் எடை மற்றும் கசிவை சரி பார்ப்பது போல சிலிண்டர்கள் காலாவதி ஆகிவிட்டதா என்று சரிபார்க்க வேண்டும்.

அதாவது கேஸ் சிலிண்டரில் a, b, c, d உள்ளிட்ட நான்கு எழுத்துக்களில் ஒன்று எழுதப்பட்டிருக்கும். அதில் a என்பது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தையும், b என்றால் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தையும், c என்றால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தையும், d என்றால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்தையும்குறிக்கின்றது. இதில் எழுதப்பட்டிருக்கும் மாதத்தை அறிந்து கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக  காலாவதியான கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் போது சிலிண்டர் வெடிக்கும் அபாயமும் ஏற்படும். எனவே இதனை சரிபார்ப்பது நல்லது.