சமையலறையில் சமைப்பது ஒருபுறம் என்றால், அதை சுத்தம் செய்வது இன்னொரு பெரிய சவாலாக இருக்கிறது. குறிப்பாக எண்ணெய், மசாலா போன்ற பொருள்கள் சமையலறையின் மேஜை, சிங்க், பாட்டில்கள் மற்றும் பாத்திரங்களில் படிந்து விடுவதால் சுத்தம் செய்வது மிகவும் சிரமமாகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு, பாத்திரங்களை சிங்கில் கழுவுவதால், அந்த இடத்தில் விழும் உணவுப் பொருள்கள், எண்ணெய் கலந்த கழிவுகள் என அனைத்தும் கறையாக மாறுகிறது. இது அழுக்காக மட்டுமல்லாமல், நாற்றமும் வரக் காரணமாகிறது.

இந்த சிக்கலை எளிதாகத் தீர்க்கும் ஒரு வீடியோ சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. ஒரு இளைஞர் தனது வீடியோவில், அலுமினியம் ஃபாயில் பேப்பரை சிறிதளவு எடுத்துக் கசக்கி, அதை சிங்கில் தேய்த்து சுத்தம் செய்யும் முறையை காட்டுகிறார். பத்து நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை தண்ணீரால் கழுவும் போது, சிங்கும் அதன் சுற்றியுள்ள பகுதியும் சாயம் பூசியது போல் ஜொலிக்கிறது. மேலும், அந்த அலுமினியம் ஃபாயில் பேப்பரை தண்ணீர் செல்லும் வடிகால் பகுதியில் போட்டால், அந்தப் பகுதியில் ஏற்கனவே இருந்த மாசுகள் கூட சுத்தமாகி விடும் என்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mugesh Babu (@tipster_mugesh)

“>

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதனை முயற்சி செய்து பார்த்து, இது உண்மையாக வேலை செய்கிறது எனக் கருத்துகள் தெரிவித்துள்ளனர். “அற்புதமான யுக்தி”, “எளிதாக சுத்தம் செய்தேன்”, “உதவியதற்கு நன்றி” என பலரும் வரவேற்கின்றனர்.

வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சாதாரண பொருள் மூலம், நம் சமையலறையை சுத்தமாக வைப்பது சாத்தியம்தான் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம். இதில் செலவும் குறைவு, நேரமும் மிச்சம்!