அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டையைச் சேர்ந்த பனியன் தொழிலாளி, திருப்பூரைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்தப் பெண்ணின் பேத்தியான 9 வயது சிறுமி,  வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, கழிவறைக்கு சென்ற வேளையில் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்டனி என்ற நபர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

அதிர்ச்சியடைந்த சிறுமி, சம்பவத்தை தனது பாட்டியிடம் கூறியதைத் தொடர்ந்து, உறவினர்கள் அவரை அழைத்து சென்று போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆண்டனியை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.