நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் வருமான வரி ஏற்கனவே அறிவித்தபடி பான் கார்டு செயலிழந்து விடும். அப்படி செயலிழந்த பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இவ்வாறு நேரிட்டால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் செயலிழந்த ஆதார் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு செயலிழந்த பான் கார்டை மீண்டும் இயக்கி வைக்கலாம். அதற்கு வருமான வரி இணையதளத்தில் விண்ணப்பித்து ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் வருமான வரி துறையின் இ ஃபைலிங் போர்டல் மூலமாக பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இதனைப் போலவே 26 ஏஎஸ் படிவ மூலமும் தெரிந்து கொள்ள முடியும். பான் கார்டு மற்றும் ஆதார் இணைப்பிற்கு வருமான வரி இணையதளத்தில் உள்ள ஆதார் இணைப்பு வசதியை அணுகலாம். அதில் உரிய விவரங்களை சமர்ப்பித்து ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இணைப்பை உறுதி செய்த பிறகு 30 நாட்களில் பான் கார்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.