இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த பான் கார்டு நிரந்தர கணக்கு எண் வருமான வரி துறையால் வரிவிதிப்பு மற்றும் பிற அடையாள நோக்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் இது பயன்படுத்தப்படும் நிலையில் பான் கார்டு மூலமாக பல நிதி மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது போலி பான் கார்டை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதால் இதனை தவிர்ப்பதற்கு உங்களது பான் கார்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு முதலில் www.incometax.gov.in/iec/foportal என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று verify your PAN என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக திறக்கும் பக்கத்தில் கேட்கப்படும் விவரங்களை நிரப்ப வேண்டும்.

பிறகு உங்களது பெயர் மட்டும் தொலைபேசி எண் ஒன்றை அனைத்து விவரங்களையும் நிரப்ப வேண்டும்.

இறுதியாக மொபைல் நம்பருக்கு வரும் செய்தியில் சில விவரங்கள் இருக்கும்.

அந்த தகவல்கள் நீங்கள் உள்ளிட்ட விவரங்களுடன் பொருந்தி இருந்தால் பான் கார்டு உண்மையானது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.