இன்றைய காலகட்டத்தில் பொது வருங்கால வைப்பு நிதி என்பது பெரும்பாலான மக்களின் முதலீட்டு விருப்பமாக உள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் வட்டி தொகைக்கு வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் இந்த திட்டத்தை தனி நபர் கணக்காக மட்டுமே கையாள முடியும். PPF திட்டத்திற்கு வருடத்திற்கு வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில் மொத்தம் 15 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட இந்த திட்டத்தில் மேலும் ஐந்து ஆண்டுகள் விருப்பத்துடன் பயனர்கள் நீட்டித்துக் கொள்ளலாம்.

இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். கூடுதல் பணத்தை டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. ஆனால் அதிகப்படியான தொகைக்கு வட்டி செலுத்தப்படாது. ஆறு வருடங்களுக்கு தொடர்ச்சியாக பங்களித்த பின்னர் உங்களது கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். நான்கு ஆண்டுகள் முடிவில் உங்கள் கணக்கில் இருந்து 50 சதவீத தொகை அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில் PPF இருட்டில் உள்ள 50 சதவீதம் பணத்தை மட்டுமே எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.